Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அரசுப் பணி வயது உச்சவரம்பு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

அரசுப் பணி வயது உச்சவரம்பு: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

இந்த வயது உச்சவரம்பு தளர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழக அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் விண்ணப்பதாரர்களுக்கான வயது உச்சவரம்பை, தற்போதைய விதிகளில் உள்ளதைவிட கூடுதலாக 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். போட்டித் தேர்வர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு உயர்வு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் வயது சலுகைகளுடன் கூடுதலாகச் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குரூப் - 1 தேர்வுகளுக்கு பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 32-லிருந்து 37 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37-லிருந்து 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் (பொது): 42-லிருந்து 47-ஆகவும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு 47-லிருந்து 52-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப் – 2, 2ஏ தேர்வுகளுக்கு பொதுப் பிரிவினருக்கு 35 வயதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 45-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுகளைப் பொறுத்தவரை பொதுப் பிரிவினருக்கு 35 வயதும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37 வயதும், எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவையருக்கு 40 வயதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வயது உச்சவரம்பு தளர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




3-வது முறையாக உயர்வு…

• 2018ம் ஆண்டு: குரூப் 1 உள்ளிட்ட சில குறிப்பிட்ட தேர்வுகளுக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டது.

• 2021ம் ஆண்டு: கொரோனா பெருந்தொற்று காரணமாக போட்டித் தேர்வுகள் தள்ளிப்போனதை அடுத்து, ஒட்டுமொத்த அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது உச்சவரம்பு கூடுதலாக 2 ஆண்டுகள் நிரந்தரமாக உயர்த்தப்பட்டது

• தற்போது மூன்றாம் முறையாக ஒட்டுமொத்தமாக 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ரத்தன் இந்தியா பவர் நிகர லாபம் ரூ.38 கோடி
அடுத்த செய்தி
300 கோடி டாலர் நிதி திரட்டும் AM Intelligence

தொடர்புடைய செய்திகள்